ஆதி புராணம்

பகவதி ஷேத்ரம்

அன்னையவள், முதன்முதலில் இப்புண்ணிய பாரதத்தில் தன் திருவடியை பதித்த ஆரண்ய ஷேத்திரமே திருவடிசூலம் என்னும் மஹாக்ஷேத்திரம்ஆகும்.
மேலும் வாசிக்க

திருவடி

நம்மீது கருணை கொண்டு, திருவடி சரணத்தை காட்டி நம்மை அரவணைத்து காக்கும் நம் அன்புக்குரிய தாய் மஹாசக்தியின் கருணை தான் என்னவோ! மேலும் வாசிக்க

தேவி புராணம்

பிரம்மத்தின் சொரூபிணியாய், பிரம்மம் தானே பெண்ணாகி இத்தரணியை காக்க தாமே வந்தவள் அன்னை மகாசக்தி. ஹரனுக்கே தாயாக நின்றவள் அன்னை மகாசக்தி. அவள் தான் பிரம்மத்தின் கன்னிகையாக விளங்குகின்றாள். முனிவர்கள், யோகியர்கள், ஞானிகள், தேவர்கள் ஆகிய அனைவருடைய அந்தர ஆத்மாவில் துதிக்கின்ற மனோண்மணியாக விளங்கி அந்தரி, அந்தரக்கன்னிகை என்று திரு பெயர் கொண்டாள். வானளாவி நின்று ஒவ்வொரு லோகத்தையும் படைத்து, வானவி, ஆகாய வாகினி, ஆகாய கன்னி என்றுப் போற்றப்படுகின்றாள். அத்தாயே தேவர்கள் முனிவர்கள், அனைவருக்கும் வேதங்களைக்கொண்டு, தம் ஆண் தத்துவமான இறைவன் பராபரனை தவக்கோலம் கொண்டு, விசாலாட்சி என்னும் திரு நாமத்தில் பூஜித்த ஸ்தலமே வாரணாசி என்னும் காசி மகாஷேத்திரம் ஆகும்.

மகிஷாசூரவதம், சண்டமுண்டவதங்களை முடித்துக்கொண்டு, பிரம்மஹத்தி தோஷம் நீங்க காளி, காமாட்சியாக தவம் புரிந்து, தர்ம நீதியில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அறவழியை எடுத்துக்கூற 32 அறங்களை கொண்டு தம் இறையனாரை பூஜித்த ஸ்தலமே காஞ்சி காம கோட்டம் என்று சொல்லப்படுகின்ற காஞ்சி மாநகரம் என்கிற காஞ்சிபுரம்.

பிறகு ஷத்திரிய தர்மத்தை ஆண்கள் மட்டுமே நிலைநாட்ட முடியும், பெண்களால் இயலாது என்கிற சூழலில், அம்பாள் சராசரி பெண்ணாக அவதரித்து அனைவரையும் போரில் தோல்வி அடையவைத்து அனைவரையும் வியப்புக்குள்ளாக்கி உலக மக்களை காத்து, சிவபெருமானின் திருக்காட்சியைக்கண்டு, திருக்கல்யாணம் புரிந்து நான்மாடக்கூடலில் மீனாட்சி என்னும் திருநாமத்தில் ஆட்சி புரிந்தாள்.

அத்தாயே இம்முற்றிய கலியுகத்தில் தர்மம் நெறிக்கெட்டு செல்வதை அறிந்த தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி, கரிய நாகமாக மாறி, ஆட்கொள்ளும் தத்துவமாய் சிவத்திருமேனி சாம்பலை வினைதீர்க்கும் மருந்தாகக்கொண்டு தன் திருஅவதாரத்தின் நோக்கத்தின் காரிய நிமித்தமாக ஏழு கன்னிகைகளில் மூத்தவளையும், தம்மை மட்டுமே துதித்து தவம் இயற்றிய ஏழு தவ சீலர்களையும் துணையாகக்கொண்டு, நிர்குணவதியாய், மகா ஜோதி சொரூபமாய் விளங்கி அன்னையவள் உதித்ததால் கரியமாரி, கருமாரி என்று பெயர் பெற்றாள். வாக்கு தேவதையாக நடம் புரிந்தாள் அவளே இம்மகாசக்தி. (இம் மகாசக்தியின் விஸ்வரூப திருக்காட்சியின் காரணம் என்ன! காண்போமாக)

மதுரதிருவடி - மாத இதழ்

மா கருமாரி

இந்திராதி தேவர்களும், ஞானியர், முனிவர், யோகியர் என அனைவரும் ஓன்று கூடி நடமாடப் போகும் தர்ம நெறிகட்டு வழி தவறி கொடும் முற்றிய கலியுகத்தை எண்ணி அஞ்சியவராய் மனம் தடுமாறி பராபரனான சிவபெருமானிடம் தங்களின் அஞ்சுதலின் இயலாமையை எடுத்து உரைத்து முறையிட இறையனார் இதற்கு எடுத்தியம்பினர். ஊழிகள் தோறும் விண்ணவர்க்கும் அனைத்து ஜீவன்களுக்கும் அல்லல்கள் நேருகையில் தடுத்தாண்டு காத்தவள் நம் ஆதி அன்னை.  இந்த தாயே நம் ஆதி அன்னை பிரம்மத்தின் சக்தியானவள். ஆதலால் நம் தாயிடம் முறையிடுவதே சரியான வழி என்று கூற அனைவரும் ஒன்று கூடி சரண கோஷமிட்டு சர்வ லோக மாதாவை அழைக்க அன்னையானவள் திருவுளம் பற்றி திருக்காட்சி கொடுத்து உரைக்களானாள். கடந்த மூன்று யுகங்களிலும் ஒவ்வொரு தேவர்க்கும் நான் கொடுத்த வாக்கின்படியும் தேவர்களாகிய தாங்கள் என் கலியுக விஸ்வரூப திருக்காட்சியினை கருணை கூர்ந்து திருவருள் புரிய வேண்டும் என்ற கூறுதலின் படியும் அறம் மயக்கமுறும் இம்முற்றிய கலியுகத்தில் திரு அவதாரம் புரிவேன் என்று திருவாய் மலர்ந்து தேவர்களின் அச்சத்தை போக்கினாள்.மேலும் வாசிக்க

ஆதிபரமேஸ்வரி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி கலியுக தேவதே

ஓம் ஸ்ரீ கரிமாரியே நமோ நமஹ !


பூவுலகில் கரிய நாகமாகத் தோன்றி, ஒரு பெண்மணியை வெள்ளிக்கிழமை அன்று தீண்டி இறக்கச் செய்து பின்பு ஞாயிற்றுக்கிழமை அன்று மயான எரிசுடலையில் அப்பெண்சடலத்திலிருந்து வாயிலாக எழுகிறாள். அதைக்கண்டு வியந்த மக்கள், மயானசுடலையில் பயத்தில் அடிக்க வரும்பொழுது அன்னையவள் கருணையுடன் வாக்கிட்டாள் நான் தர்மத்தின் தாயாக உலகை காக்க வந்த கலியுக நாயகி கரிமாரி என்றாள். அப்பெண்மணி தன்னால் பிறக்கப்பெற்ற ஏழு கன்னிகைகளில் மூத்தகன்னிகை ஆவாள். அப்பெண்ணின் பிறப்பு, இறப்பு, அன்னையின் திருஅவதாரத்தின் காரணத்தை கொண்டது என்று வாக்கிட்டாள்.

அன்னையவள் கரிய நாகமாகத்தோன்றி தீண்டி ஆட்கொள்ளும் தத்துவமாகி, ருத்ர மயான எரிசுடலையில் வயோதிகம் பெருக்கி, அருட்பெருஞ்ஜோதி வடிவிலான தலைமுறை தத்துவமாய் உலகின் நிலையாமையை எடுத்துரைத்து சகலமும் தனக்குள் ஒடுக்கம் என்பதை உணர்த்த தர்மத்தின் வாக்கு தேவதையாய் இக்கலியுகத்தில் கரிமாரி எனும் திருநாமத்தில் திருஅவதாரம் புரிந்தாள். முன்னர் யுகமதில் தம் குமாரனுக்கு அசுர படைகளை மாய்க்க வேல் படை கொடுத்து, வேதநாயகனுடன் வேதநாயகியாய் நின்ற ஸ்தலமும், குறுமுனி அகத்தியனுக்கு திருமணக்காட்சி கொடுத்து அம்முனி தம் கலியின் வாக்கு சக்தியாக வரும் நன்னாளை எண்ணி தவமியற்ற குண்டலினி ஜந்து தத்துவமாய் கும்பமாரியாக வழிபட்டுக்கொண்டிருந்த வடவேதாரண்யம் என்னும் திருத்தலத்திற்கு தாம் உதித்த சிவ சாம்பல் சுடலையை விடுத்து முன்சென்று அருளாளர் பாளையக் குமாரனை பின்நடத்தி திருவடிப்பதித்து அறத்தின் நாயகியாய் அருள்மழை பொழிந்தாள்.மேலும் வாசிக்க

சுவாமிகளின் பொன்மொழிகள்

அகில உலகமும் தன் நாமத்தை அறியவும் பல்லாயிரம் ஆண்டுகளாக அவளின் விஸ்வரூப சொரூபத்தைக்காண தவமேற்கொண்டிருக்கும் தேவர், மூவர், சித்தர், யோகியர், ஞானியர்களுக்காகவும் தன் ஆதி ஷேத்திரமாகிய ஏழு மலைகளால் சூழப்பெற்று அடர்ந்த காடுகளும் சுனைகளுமாகிய அழகிய சோலைவனத்தின் நடுவே தம் ஆறாம் தலைமுறை அருளாளர் அககுக யோகி புண்ணியகோட்டி மதுரைமுத்து சுவாமிகளை காரிய நிமித்தமாக வைத்து, தன் அழகிய பொற்திருவடியைக் காட்டி ஆண் பெண் தத்துவமாக காட்சி அளித்து விண்ணிற்கும் மண்ணிற்கும் ஓங்கி சுடர்விடும் மாபெரும் தீப்பிழம்பாகி அதில் அய்யன் அன்னையிடம் ஒன்றிணைந்து ஏகமாகி அம்மாபெரும் ஜோதியில் பிரம்மாண்ட சொரூபமாக தன் விஸ்வரூப காட்சி கொடுத்தாள்.

தான் காட்சி கொடுத்த அவ்விடத்திலேயே தமக்கு அவ்விதமே மகாதிருமேனியாக அமைத்து அனைத்து மாந்தர்களையும் காணச்செய்து அருள்பெறுவதற்குரிய வழியை செய்ய வேண்டும் என்று தன் சித்த குகயோகி புண்ணியகோட்டி மதுரைமுத்து சுவாமிகளுக்கு கட்டளையிட அதன்படி அவளின் திருமேனிக்காக பல இடங்களில் அலைந்து திரிய அவளே தன் திரிசூலத்தை ஊன்றி இவ்விடத்தில் பல லட்ச ஆண்டுகளாக என் திருமேனிக்காக சுயம்பாக உள்ளேன் என்று எடுத்துரைக்க அவ்வாறாகவே 22 அடி ஆழத்தில் அவளின் சுயம்பு திருமேனியை எடுத்து அவள் கொடுத்த காட்சியின் படியும் அவள் எடுத்துரைத்த அருளின் படியும் நியமனத்துடன் 51 சக்தி பீடங்களின் மொத்த தத்துவப்பொருளாக 51 அடி உயரத்தில் அவளின் அகண்ட அழகிய திருமேனி அமைக்கப் பெற்றாள்.மேலும் வாசிக்க

அன்னையின் மகிமை

அன்னையவள், முதன்முதலில் இப்புண்ணிய பாரதத்தில் தன் திருவடியைப் பதித்த ஆரண்ய ஷேத்திரமே திருவடிசூலம் என்னும் மஹாக்ஷேத்திரம் ஆகும். அன்னை, சர்வலோக தேவர்கள், சித்தர்கள், யோகியர்கள், ஞானியர்கள் ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்க, இம்முற்றிய கலிகாலத்தில், தம் அருள் பாலகன் அககுக யோகி மதுரைமுத்து சுவாமிகளுடன் ஒன்றெனகலந்து அனைவர்க்கும் ஒன்றெனவாகி மஹாசக்தி சொரூபமாய் ஜோதிர்மயமாகி மஹாஜோதியாக காட்சியளித்து அண்டமும் பிண்டமும் அளவிடமுடியாத மகா அற்புதத்திருவடிகாட்டி, அருள் திரு ஞானசூலத்தை நாட்டி அற்புதத்திரு கண்களால் கருணை மழை பொழிந்து அருளாட்சி புரிகின்ற இத்திவ்யஷேத்திரமே, திருவடிசூலம் என்னும் சர்வசக்தி பீடமாகும்.மேலும் வாசிக்க

For any Info