சித்திரா பௌர்ணமி

நம் ஆலயத்தில் ஒவ்வொரு வாரமும் அம்பாள் வந்து ஆட்கொண்டு, அருள் ஆசி வழங்கி, நல்வழிப்படுத்தி நடத்தி வருகிறாள். எல்லா தேசத்தவருக்கும் பொதுவாக எல்லோருக்குமே அவள் தான் தாய், காப்பவளும் அவளே! அருள்பவளும் அவளே!! பசிப்பிணியாற்றுபவளும் அவளே!! நம் வாழ்வியலை நகர்த்திகாட்டுகிறவளும் அவளே !!! உலகத்தில் எத்தனையோ சக்திகள் இருக்கிறது என்று சொல்கிறோம். ஆனால் அவை எல்லாவற்றிக்கும் மூலாதார சக்தி (ஆதராசக்தி) எது என்றால் பிரம்மகன்னி என்று போற்றப்படுகின்ற பிராமணக்கன்னி எனும் மகா சக்தி என்று இந்த யுகத்தில் சொல்லப்படுகின்றது. பிரம்மம் என்றால் முதல் என்று பொருள். அந்த மகாசக்தியானவன் சித்திரா பௌர்ணமியன்று இப்பிரபஞ்சத்தின் மையப்பகுதியாகவும் (தேரின் அச்சாணிபோல) அமைந்துள்ள இவ்விடத்திற்கு (நம் ஆலய வளாகத்திற்கு) லோக ஷேமத்திற்காக நம்மை நாடி வருகின்றாள். அந்த நாளை பெரிய விழா என்று சொல்வதை […]

அவனில் அவள்

“அவனன்றி ஒர் அணுவும் அசையாது“ என்று சொல்வதை  கேட்டிருக்கிறோம்.  இங்கே அவன் என்று சொல்வது ஈஷ்வரன் மாத்திரம் அல்ல. ஏனென்றால் ஈஸ்வரனின் அம்பாளும் அடக்கம் அவனும் அவளும் ஒன்றே. அவனில் அவளும் இருக்கிறாள்.   அதனால் தான் இறைவனை அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கிறோம். ஈஸ்வரன்- ஒளி    மற்றதெல்லாம் அம்பாள் தான் ச்- ஈஸ்வான், இ- அம்பாள்,  ச்+இ= சிவம் இரண்டும் இணைந்தால் சிவம்.    சிவம் வெளிப்பட வேண்டுமானால் அங்கே ஈஸ்வரி இருக்க வேண்டும். சிவலிங்கம் கூட ஆண் அல்லது பெண் கல்லில் செதுக்கப்படுவதில்லை. ஆண் மற்றும் பெண் இணைந்த கல்லில் தான் வடிவமைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் பல்லவர் ஆட்சிகாலத்தில் கூட அம்பாளுக்கென்று தனி சன்னதி கிடையாது. ஏனென்றால் ஈஸ்வரன் எங்கெல்லாம் இருக்கிறாரோ அங்கெல்லாம் அம்பாள் இருக்கிறாள். ஆனால் பின்னால் வந்த சந்ததியினர் அம்பாளை […]

உண்மையை உணருதல் வேண்டும்

நாம் எங்கிருந்து வந்தொம்?தெரியாது. நாம் எங்கே போகிறொம்? தெரியாது. வந்த இடமும் நமதில்லை! போகும் இடமும் நமதில்லை. எல்லா புகழும் இறைவனுக்கே! என்று சொல்கிறொம், ஏன்? புகழை உனக்கு கொடுத்தவர் யார்?இறைவன்.அப்ப்டியனால் கொடுக்கப்பட்ட புகழ் யாருக்கு சொந்தம்? இறைவனுக்கு. இதை ஒருவன் தன் உணர்வுகளை வசப்படுத்தி ஆத்மார்த்தமாக உணர்ந்தாலே அவன் நான் என்ற அகந்தையையும், தவறுகள் செய்வதையும் தவிர்த்து விடலாம்.

கோயில்களில் உள்ள தனி வழி பற்றி கூறுகையில்

இன்று ஆலயங்களில் இறைவனை தரிசனம் செய்வதற்கு தனி வழி, சிறப்பு வழி ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது சரியா? என்று கேட்டால் கண்டிப்பாக இது சரியில்லை என்றுதான் சொல்வேன். ஆனாலும் தனியாக அருகாமையில் நின்று பார்ப்பவர்களுக்கு இறைவன் தனியாக காட்சி கொடுப்பதில்லை. அதோ போல தொலைதூரத்தில் நின்று தரிசிப்பவர்களுக்கு காட்சி கொடுக்காமல் மறுக்கின்றதும் இல்லை. இருவருக்கும் ஒன்றாகத்தான் காட்சி கொடுத்துக் கொண்டு இருக்கிறார். திரையரங்கில் ரூ.100 கொடுத்து பார்ப்பவருக்கும், ரூ.10 கொடுத்து பார்ப்பவருக்கும் காட்டப்படுவது ஒரே திரைப்படம் தான். உடலுக்கு வேண்டுமானால் சுகத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மனத்திற்கு சுகம் ஏற்படுத்த முடியாது. ஆனால் தெய்வ வழிபாடு என்பது மனது சம்பந்தப்பட்டது. “மனத்துக்கண் மாசிலன் ஆதன் அனைத்து அறன் ஆகுல நீர பெற மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்று சான்றோர்கள் […]

மனதின் சக்தி

சிலர் “என் குருநாதர் கனவில் காட்சி கொடுத்தார்! அதைப் பார்த்தேன்! இதைப் பார்த்தேன்!! என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இதற்கு காரணம் என்ன? நீ எதை நினைத்துக் கொண்டு இருக்கிறாயோ அதுவே உனக்கு காட்சியாய் வரும். இதுவே உண்மை. இதைத்தான் நினைவு. நினைவே சங்கீதம் என்று சொல்கிறோம். ஆகவே நல்லதையே நினைப்போம். இதைத்தான் திருவள்ளுவர், “உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல் மற்ற அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து” என்று குறிப்பிடுகிறார். எண்ணுவதெல்லாம் உயர்வை பற்றியே எண்ணவேண்டும். அவ்வுயர்வு கை கூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது. பொதுவாகவே சிலர் ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்னர் “இதை செய்தால் இப்படி ஆகி விடுமா? இது சரியாக வருமா? இது தப்பான வேலையாகி விடுமா? என்று நினைக்கிறார்கள். இப்படி நினைப்பதை விட்டு விட்டு “இதை நிச்சயம் என்னால் […]

மருத்துவமே இல்லாத வாழ்க்கை

ஆதிபராசக்தியே இவ்வுலகின் ஆதாரசக்தி. இவ்வுலகின், ஆக்கல், அழித்தல், காத்தல் முன்று கடமைகளுக்கும் அவளே மூலாதாரம். தண்ணீரின் குளிரிச்சியும் அவளே. தீயின் வெப்பமும் அவளே. சந்திரனின் மென்மையும் அவளே. சூரியனின் ஒளியும் அவளே. இந்த உலகமே அவள் அன்றி அசையாது. நமக்கும் எற்படும் வியாதிகளை மருத்துவர்கள் மருந்துகளாலும், அறுவை சிகிச்சையாலும் காப்பாற்றுகின்றனர் என்று நினைக்கிறோம். ஆனால் அவள் சக்தியின்றி இது நடக்க முடியாது. மருத்துவமே இல்லாத வாழ்க்கையை நம்மால் வாழ முடியும். எப்படி? ஜம்புலன்களை அடக்கி, நல்ல மனதோடு செயல்பட்டு ஆன்மீக ஆரோக்கியத்தை (Spiritual Health) பெறும் போது உடல் ஆரோக்கியம் (Physical Health) நன்றாக இருக்கும்