மெய் அன்பர்களின் பதிவுகள்

திருச்சாம்பலே எனக்கு மருந்து

என் பெயர் வெங்கடேசன் தேவி ஸ்ரீ  கருமாரி அம்மனின் அருளால் என் வாழ்க்கையில் நடந்த அற்புதத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் 2003 இல் எனது அலுவலக நண்பர் ஒருவர் வாயிலாக  திருவேற்காடு கருமாரிஅம்மன் கோயில் குறிமேடைக்கு வந்தேன். அம்பாளிடம் திருச்சாம்பல் பெற்றேன் எனது வாழ்க்கை படிப்படியாக முன்னேறியது. பிப்ரவரி 2008-இல் அம்பாள் அருள்வாக்கின்படியும் ஆசிர்வாதத்துடனும் எனக்கு திருமணம் நடைப்பெற்றது எனது மனைவியும் சிறு வயது முதலே தீவிர கருமாரியம்மன் பக்தை ஆவார். திருமணத்துக்கு முன்னர் எனது மனைவியை குறிமேடைக்கு அழைத்து சென்றேன் அப்போது அம்பாள் அருள்வாக்கிடும்போது எங்களை அழைத்து "இப்பாலகனுக்கு இப்பாலாகி என முடிவு செய்தது நான்" "உங்களது திருமணம் நிச்சயம் எனது ஆசியுடன் நடைபெறும்" என்று கூறி திருச்சாம்பல் அளித்தாள்.

திருமணம் முடிந்து சில நாட்கள் சென்ற பின் திடிரென்று ஒரு நாள் எனக்கு உடல் நலம் சரி இல்லாமல் போய்விட்டது. மருத்துவரிடம் சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது எங்களுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. எனது வயிற்றில் 14CM அளவில் பெரிய கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அம்மனிடம் சென்றோம் அன்று சித்திராப் பௌர்ணமியாதலால் அம்பாள் எழுந்தருளி அருள்வாக்கு உரைத்துக் கொண்டிருந்தாள். அம்மன் எங்களை அழைத்து அருள்வாக்கில் "நான் அகற்றி நிற்பேன், எமனிடம் வாதாடிக் காத்து நிற்பேன்" என்று கூறினாள்."என் கனி, மஞ்சள், வேப்பிலை, திருச்சாம்பலை புகட்டி நிற்கட்டும்" என உரைத்தாள். நாங்கள் அம்பாள் பாதத்தில் சரணடைந்தோம். அம்பாள் அளித்த மருந்தாகிய கனி வேப்பிலை, மஞ்சள், கற்பூரம் மற்றும் திருச்சம்பலே எனக்கு மருந்து. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பெரிய மருத்துவமனைகளும் தங்களால் காப்பாற்ற முடியாது என கை விரித்துவிட்டனர். அப்படியே காப்பாற்றினாலும், அந்த கட்டி வயிற்றிலுள்ள முக்கிய உறுப்புகளுடன் ஒட்டியிருப்பதால் அவ்வுறுப்புகளையும் அகற்ற வேண்டும் என்று கூறினார். அத்தோடு எங்களுக்கு குழந்தை பிறக்கவும் வாய்ப்பில்லை என்று கூறினர்.

வாழ விருப்பமில்லாமல் நானும் எனது மனைவியும் எங்களது உயிரை விட்டு விடலாம் என முடிவு செய்தோம். அப்போது எங்களுக்கு பேராதரவாகவும் பேரன்போடும் மதுரை முத்து சுவாமிகள் அறிவுரையும் தைரியமும் வழங்கினார். அம்பாளே நேரில் வந்து அறிவுரையும் தைரியமும் அளித்ததாக உணர்ந்தோம். சுவாமிகள் என்னிடம் "நீ நீண்ட ஆயுளோடு இருப்பாய் என்றும் அம்பாள் அருளால் நிச்சயம் உனக்கு குழந்தை பிறக்கும்" என்று கூறினார்". நாட்கள் சென்றன அம்பாள் கூறும் அருள்வாக்கின் தைரியதாலும்,அவள் அளித்த மருந்தின் (கனி,சாம்பல்,வேப்பிலை,மஞ்சள்) சக்தியாலும் ஸ்கேன் ரிப்போர்ட்டில் மாறுதல்கள் ஏற்பட்டன. நல்ல மருத்துவர் ஒருவரை அம்பாளே காட்டினாள். அவர் தைரியமாக, எந்த உறுப்புகளுக்கும் பாதிப்பில்லாமல் இந்த அறுவைசிகிச்சையை செய்ய முடியம் என்று கூறி, அறுவைசிகிச்சையை மேற்கொண்டார்.
எட்டு மணி நேர (8 hrs ) அறுவை சிகிச்சைக்குப்பின் எந்த உறுப்புகளுக்கும் பாதிப்பில்லாமல் அந்தக் கட்டி அகற்றப்பட்டது. அந்தக் கட்டி சாதாரண கட்டி என்று மருத்துவ அறிக்கையில் தெரிய வந்தது. மருத்துவர்களே இது ஒரு மருத்துவ அதிசயம் (Medical Miracle) என்று கூறினர். அறுவை சிகிச்சைக்குப்பின் எனது உடல் நலம் வேகமாக முன்னேறியது. சில மாதங்கள் கழித்து அம்மன் மற்றும் காத்தவராய சுவாமி அருள்வாக்கிற்குஇணங்க எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு "கிருபாகரி" என்று அம்பாள் பெயர் சூட்டினாள். தற்போது நாங்கள் திருவடிசூலம் அம்மன் கோவியில் தவறாமல் சேவை புரிந்து வருகிறோம். எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை அம்பாளுக்கு சேவை புரிவதே எங்கள் விருப்பமாகும். தாய் கருமாரி அனைத்து உயிர்களுக்கும் தாய். சோதனை காலத்தில் மட்டுமல்லாது எப்பொழுதுமே அத்தாயின் நாமத்தை மனதார என்றென்றும் உச்சரித்து வந்தால் மலை போல் வரும் துயரையும் பனிபோல் அகற்றிவிடுவாள் தேவி ஸ்ரீ கருமாரி அம்பாள் திருச்சாம்பலுக்கு இருக்கும் சக்தி இவ்வுலகில் வேறு எந்த மருந்திற்கும் இல்லை. எல்லாம் வல்ல தாயின் பாதத்தை சரணடைகிறோம் !!!தாயே ஓம் சக்தி கருமாரி!!

அம்மனின் எலுமிச்சை கனியும் திருச்சாம்பலும்

என் பெயர் திருமதி.ஜெயலட்சுமி.பி.நான் சென்னையில் வசிக்கிறேன்.எனது இளம் வயதில் குழந்தை நலமாக பெற என் சொந்தக்காரர் திருவேற்காடு கருமாரி அம்மன் தரிசனம் செய்ய அறிவுறுத்தினார்கள். அவர்களின் அழைப்பின் காரணமாக அம்மனின் ஆசிர்வாதம் பெற கோவிலுக்கு சென்றேன். அம்மனின் தரிசனம் மற்றும் அப்போதய ஸ்வாமிஜி ஆசிர்வாதமும் பெற்று எலுமிச்சை கனியும் திருசாம்பலும் பெற்றேன். அவர்கள் ஏழு வாரம் தொடர்ந்து தரிசனம் செய்து கனியையும் சாம்பலையும் தண்ணீரில் கலந்து அருந்த சொன்னார்கள். அப்படியா நானும் நம்பி செய்து வந்தேன்.எனக்கு அந்த வருடமே அத்தெய்வத்தின் அருளால் பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு நிறைய வருடங்கள் பிறகு திருவேற்காடு அம்மனை சந்திக்க சமயம் ஏற்பட்டது. அம்மனை நம்பி அவளின் கருணையால் பல சோதணைகளை தாண்டி வாழ்கிறோம். அவளை பின்தொடர்ந்து அவளையே நம்பி திருவடிசூலத்தில் பக்தராக திகழ்கிறோம்.

அன்னையின் திருவாக்கு

நான் ஒரு கால்பந்து வீரராக 1988 ஆம் ஆண்டு முதல் திருவேற்காட்டிற்கு வந்து விளையாடி விட்டு செல்வேன். அனால் சர்வ சக்தி தேவி ஸ்ரீ கருமாரி அம்மனை தரிசிக்கவும் சாம்பல் பெறவும் 1992 ஆம் ஆண்டுதான் பாக்கியம் கிடைத்தது. தொடர்ச்சியாக வெள்ளி, ஞாயிறு என அம்பாளிடம் சாம்பல் பெறுவது வழக்கம். அப்பொழுது,மருளாளர் திரு.புண்ணியகோட்டி ஸ்வாமிகள் மீது அம்மன் அருள்வாக்கு உரைப்பாள். அம்மனின் அருளால் எனக்கு இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பும் தேசிய கால்பந்து வீரராகவும் தேர்வு பெற்றேன்.அம்மனின் அருளாலும் புண்ணியகோட்டி ஸ்வாமிகள் ஆசியுடனும் 1997 ஆம் ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு அதே ஆண்டில் மருளாளர் பு.மதுரை முத்து ஸ்வாமிகள் அருளால் திருமணம் நடைபெற்றது. (பு.மதுரை முத்து ஸ்வாமிகள் நடத்தி வைத்த முதல் திருமணம் ஆசி பெற்றேன்). படிப்படியாக எனக்கு சொந்த இடத்தில ஒரு பெரிய வீட்டையும் அமைத்து கொடுத்து, பிறகு விக்னேஷ், ஸ்ரீமன் நமோ நாராயணா என்ற இரு மகன்களை அளித்தாள். அப்பொழுது மதுரை முத்து ஸ்வாமிகள் "நீங்கள் ஆலயத்திற்கு வந்து மட்டும் செல்லாமல் ஏதாவது ஒரு சேவை செய்ய வேண்டும்" என ஆலோசனை அளித்தார்.அம்மன் அளித்த அந்த சேவையை தொடர்ச்சியாக செய்து வருகிறேன்.பல ஆலய விழாக்களில் கலந்து கொள்ளவும், இந்தியாவில் உள்ள எல்லா புனித நதிகளில் நீராடுவதற்கு ராமேஸ்வரம் முதல் மஹாபலிபுரம் ,காசி,அலகாபாத்,கேதார்நாத்,பத்திரிநாத்,கங்கோத்ரி,யமுனோத்ரி,உஜ்ஜைனி மற்றும் கைலாயம் சென்று வரும் பாக்கியமும் அளித்தாள்.

 

எனது இளைய மகன் ஸ்ரீமன் ஒருநாள் மார்ச் 13 ஆம் நாள் 2014  ஆம் ஆண்டில் வீட்டில் அம்மை போட்டு படுத்த படுக்கையாக இருந்தான். பிறகு,அருகிலுள்ள வேலம்மாள் மருத்துவமனையில் சேர்த்தோம்.பிறகு, மதுரை முத்து ஸ்வாமிகளின் ஆலோசனை பேரில் Childtrust ஆஸ்பிடல் எமெர்ஜென்சி வார்டில் சேர்த்தோம். அப்பொழுது எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.எங்கள் மகனுக்கு "குளின்பாரிஸ் (GBS)" என்ற வைரஸ் தாக்கியுள்ளது என்றும் உயிர் பிழைப்பது கடினம் என்றும் டாக்டர்கள் கூறினார்கள். அன்றே சிகிச்சையை தொடங்கினார்கள். தினந்தோறும் அதிர்ச்சியை சந்தித்து கொண்டிருந்தோம். ஓர் ஞாயிற்றுக்கிழமை அம்பாள் எங்கள் இருவரையும் அருள்வாக்கின் போது அழைத்து "உங்கள் மகனை நான் காப்பாற்றுகிறேன் " என்றும் "அவனை ஓர் பெரிய ஆளாக செய்வேன்" என்றும் சாம்பல் அளித்து அருள்வாக்கு உரைத்தாள். நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. பணமும் பல லட்சங்களாக செலவாகின.ICU வார்டில் மூன்று மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன. தினந்தோறும் ICU வார்டில் அழுகை குரல்தான். ஒருநாள் இரவு 12 மணியளவில் ICU வார்டில் மட்டும் அலாரம் அடித்தது. எல்லோரும் வெளியே ஓடினார்கள். நாங்கள் மட்டும் வார்டில் சென்று பார்த்தோம்.அப்பொழுது ஸ்ரீமன் தூங்காமல் விழித்து கொண்டிருந்தான்.அவனுக்கு பேசமுடியாது. காரணம் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது.அப்பொழுது எனது மனைவி அம்பாள் வந்திருப்பாளோ என்று கூறினாள்.அதற்கு நான் நம்பவில்லை.மறுநாள் மாலை நடராஜன் என்ற நண்பர் மருத்துவமனைக்கு ஸ்ரீமனை பார்க்க வேண்டுமென வந்திருந்தார்.பிறகு அவர் நேற்றிரவு கனவில் ஸ்வாமிகளும்,நானும் வந்ததாகவும் ஸ்ரீமனுக்கு ஆசி அளித்ததாகவும் கூறினார்.இதே இடம்தான் இதே வார்ட்தான் இதே நம்பர்தான் என்று ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு கூறினார்.அப்போதுதான் உணர்தேன்,இரவு வந்தது அம்பாள் என்று. மறுநாள் காலை ஸ்ரீமனிடம் "யாரவது இங்கு வந்தார்களா" என்று  கேட்டபொழுது,ஆச்சர்யத்துடன் கை,தலை அசைத்து "ஆம்" என்றும் இரவில் கையால் வந்து தடவி கொடுப்பதும்,யாரோ ஒருவர் தலை பின்புறமாக நிற்பது போலவும் கூறினான்.பிறகு,மறுவாரம் அம்மனின் அருள்வாக்கில் அம்பாள் யமனுடன் வாதாடி காத்ததாகவும்,அவன் அருகாமையில் இருந்ததாகவும் வாக்கு உரைத்தாள். அப்போதுதான் நாங்கள் இருவரும் மனதார உணர்ந்தோம்.வென்டிலேட்டரை அகற்றினார்கள். அப்போது ஸ்ரீமன் உரைத்த முதல் குரல் "கருமாரி". நானும் எனது மனைவியும் மனைவியும் பட்ட கஷ்டங்கள் பல. அனால் நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என்பதையும்,"நான்" என்ற அகந்தையை விடவேண்டும் என்பதையும் உணர்ந்தோம். இன்று ஸ்ரீமன் ஆரோகியத்துடனும் பள்ளிகளுக்கான தேசிய அளவு கால்பந்து போட்டியில் கலந்துகொண்டு ,டெல்லி சென்று திரும்பினான்."Childtrust " மருத்துவமனை முழுவதும் ஆச்சர்யம்."குளின்பாரிஸ் (GBS)" வைரஸ் ஆட்கொண்ட நோயாளிகள் பிழைப்பது லட்சத்தில் ஒருவர்தான் என்றும் அப்படியே பிழைத்தாலும் நடக்க முடியாது என்றும் மருத்துவமனையில் கூறினார்கள்.இது அம்மனின் அற்புதமே என தலைமை டாக்டர் திரு.பாலசுப்ரமணியமும் தன் வாயாலே கூறினார். இதுபோல பல அற்புதங்களை என் குடும்பத்தில் செய்து கொண்டிருக்கிறாள்.எனவே காலம் முழுக்க அம்மனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை எங்கள் தலையாய கடமையாக நினைக்கிறோம்.